யாழ்.காரைநகர் மணற்காடு தேவிகும்பநாயகி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(07.03.2023) காலை-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.
இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-03 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-06 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சப்பரத் திருவிழாவும், 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தவாரிதி உற்சவமும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.