தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு மாசிமக விசேட உற்சவம்


வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மாசிமக விசேட உற்சவம் நாளை திங்கட்கிழமை(06.03.2023) சிறப்பாக நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை-05.30 மணியளவில் உஷக் காலப் பூசை ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் மாசிமகத் தீர்த்தம் இடம்பெறும். காலை-07 மணியளவில் காலைச் சந்திப் பூசை, கும்ப பூசை, திரவியாபிஷேகம் என்பன இடம்பெற்றுக் காலை-09.30 மணியளவில் அபிஷேகமும் நடைபெறும்.

முற்பகல்-10.30 மணியளவில் ஸ்வர்ணபத்ம புஸ்பார்ச்சனையைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் சிறிய தேரில் எழுந்தருளி உள்வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும் என மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.          

(செ.ரவிசாந்)