யாழில் மீன்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி

யாழ்.மாவட்டத்தில் மீன்களின் விலைகளில் கடந்த சில தினங்களாகத் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  

யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் மீன் சந்தையில் தற்போதைய விலை நிலவரப்படி ஒரு கிலோ சுறா மீன் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ விளைமீன் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ பாரை மீன்1000 ரூபாவாகவும், ஒரு கிலோ முரல் மீன் 800 ரூபாவாகவும், ஒரு கிலோ கும்பலா மீன் 800 ரூபாவாகவும், ஒரு கிலோ நண்டு 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ இறால் 1400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை, இந்துக்களின் புனிதமான விரதங்கள் மற்றும் ஆலயத் திருவிழாக்கள் கொண்ட மாதமாகப் பங்குனி மாதம் காணப்படுகின்றமையால் மீன்களின் விற்பனை குறைவடைந்தமையே மீன்களின் விலை வீழ்ச்சிக்குக் காரணமென மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.