பருப்பு, சீனியின் மொத்த விலைகளிலும் சரிவு!


பருப்பு மற்றும் வெள்ளைச் சீனியின் மொத்த விலைகள் குறைவடைந்துள்ளதாகப் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப் பெற்றமையால் பருப்பு, வெள்ளைச் சீனியின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதன்படி ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 40 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 30 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மொத்த விலைகள் குறைவடைந்தமையால் விரைவில் சில்லறை விலைகளும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.