கோதுமை மா, பாண் விலைகள் குறைப்பு

இன்று புதன்கிழமை(08.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிறீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையைக்  குறைக்கத் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.