எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு மீள் நிரப்பப்படும் தினத்தில் மாற்றம் !


எதிர்வரும் காலங்களில் எரிபொருளுக்கான QR குறியீடு வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் மீள் நிரப்பப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று புதன்கிழமை(08.03.2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கீடு மீள் நிரப்பப்பட உள்ளது

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் மேற்கண்ட தகவலைப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் QR குறியீடு மீள் நிரப்பப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.