வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்கு மருந்துகள் கையளிப்பு

வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்கு யாழ்.பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஈகிள் கெயர் ரிறஸ்ட் அமைப்பினரால் சிறுவர்களுக்கான  ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது.  

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(28.02.2023) முற்பகல்-10.30 மணியளவில் மேற்படி மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களுக்கான ஒரு தொகுதி மருந்துகளை ஈகிள் கெயர் ரிறஸ்ட் அமைப்பினர் சார்பில் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர்.ரதினி காந்தநேசனிடம் யாழ்.பரியோவான் கல்லூரியின் முன்னாள் அதிபர் வண.என்.ஜே. ஞானப்பொன்ராஜா, முன்னாள் உப அதிபர் எஸ்.அன்ரனிப்பிள்ளை ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் நாட்டில் தற்போது மருந்துப் பொருட்களிற்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில் வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் ரதினி காந்தநேசனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)