சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் நிதி உதவிகள் கையளிப்பு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தச் சிறப்பு நிகழ்வுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(17.03.2023) காலை-10.50 முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.  

நிகழ்வில் திருநீற்றின் மகிமையும் அதன் பலாபலன்களும் எனும் தலைப்பில் ஆசுகவி. செ.சிவசுப்பிரமணியம் ஆன்மீகச் சிறப்பு உரை ஆற்றினார்.

நிகழ்வில் கோப்பாய் தெற்கு, கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த விசேட தேவைப்பாடுடைய குடும்பத்தினருக்கு வீடு கட்டுமானப் பணிக்காக  100,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.  

குருக்கள் பகுதி, கரணவாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பத்தினரின் சுயதொழிலுக்காக 100,000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.


இதன்போது காட்டுப்புலம், கரவெட்டி கிழக்கில் அமைந்துள்ள காளி கோயில் கட்டடப் பணிக்காக 50,000 ரூபா நிதி உதவி ஆலய தர்மகர்த்தா சபையினரிடம் வழங்கப்பட்டது.