14 வருடங்களின் பின்னர் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுக் கடந்த-14 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை(03.04.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்களை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கடந்த-2009 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்த 45 வயதான திருவருள், 34 வயதான சுலக்சன் மற்றும் 33 வயதான தர்சன் ஆகிய மூவரே இவ்வாறு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.