நல்லூரில் இலவச யோகாசனப் பயிற்சிகள் விரைவில் ஆரம்பம்

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் அறுபது மூன்று நாயன்மார் குருபூசை மண்டபத்தில் ஆண், பெண் இருபாலாருக்குமான இலவச யோகாசனப் பயிற்சிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.      

கிழமை நாட்களில் ஒரு பிரிவாகவும், வார இறுதி நாட்களில் மற்றொரு பிரிவாகவும் மாலை-05 மணி தொடக்கம் மாலை-06.30 மணி வரை இலவசமாக மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக யோகாசனப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில் பெறுமதியான சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே, யோகாசனப் பயிற்சிகள் பெற விரும்பும் ஆர்வம் உள்ள ஆண், பெண் இருபாலாரும் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் நேரடியாகவோ அல்லது 0212215054, 0760503863 மற்றும் 0706899651 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ பதிவுகளை மேற்கொள்ள முடியும் என வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

(செ.ரவிசாந்)