கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கூடி வாழ்வோம் நூல் வெளியீட்டு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் எனும் நாடக நூலின் வெளியீட்டு விழா நாளை திங்கட்கிழமை(03.04.2023) பிற்பகல்-02 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் மேற்படி கலாசாலையின் முதல்வர் ச.லலீசன்  தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் முதல்வர் வீரகத்தி கருணலிங்கம் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கை.திலகநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

நூலைக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் லலீசன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை ஓய்வுநிலை விரிவுரையாளர் வ.சி. குணசீலன் பெற்றுக் கொள்ள உள்ளார்.

நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பௌநந்தி ஆற்ற உள்ளதுடன் நூலின் நயப்புரையை யாழ்.கல்வி வலய நாடகத்துறை ஆசிரிய ஆலோசகர் யோ.யோண்சன் ராஜ்குமார் நிகழ்த்துவார்.