குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் யோகர் சுவாமிகளின் 59 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 59 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த சனிக்கிழமை(01.04.2023) பக்திபூர்வமாக நடைபெற்றது.

காலை-10 மணி முதல் கூட்டு நற்சிந்தனை மற்றும் திருமுறைப் பாராயணம் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நண்பகல்-12 மணிக்குச் சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றதுடன் இறுதியாக அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.  குறித்த நிகழ்வில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)