பிரசித்திபெற்ற நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் கந்தபுராணப் படனப் பூர்த்தி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (13.04.2023) நடைபெற்றது.
நேற்று முற்பகல்-11.30 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கந்தபுராணபடனப் பூர்த்தி நிகழ்வு பக்திபூர்வமாக நடந்தேறியது.
இதேவேளை, நாளை சனிக்கிழமை(15.04.2023) விசேட அபிஷேக ஆராதனை, பூசையைத் தொடர்ந்து நண்பகல்-12 மணிக்கு கந்தபுராண படனப் பூர்த்தியை ஒட்டிய மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் என மேற்படி ஆலயப் பிரதமகுரு தெரிவித்தார்.