சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏழாலையில் நாளை இரத்ததான முகாம்



சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(15.04.2023) காலை-08 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை ஏழாலைச் சந்தியில் இயங்கி வரும் ஏழாலை வடக்கு- கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், இளையோர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குருதிக் கொடை வழங்க விரும்புபவர்கள் 0771864593, 0776578125 மற்றும் 0774109151 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.