குடத்தனையில் நாளை அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா

கவிஞர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா நாளை  ஞாயிற்றுக்கிழமை(16.04.2023) மாலை-03 மணியளவில் யாழ்.வடமராட்சி குடத்தனை வடக்கில் அமைந்துள்ள அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்க வளாகத்தில் எழுத்தாளர் வேல் நந்தகுமார் தலைமையில் இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் மருதங்கேணிப் பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் செபமாலை தோமஸ் யூட் பிரதம விருந்தினராகவும், செல்வா சனசமூக நிலையத் தலைவர் ஆ.இராமநாதன், குடத்தனை வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுமணா ஜெயரூபன், குடத்தனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மீரா அருள்நாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நூலாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.