மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் சண்முகனுக்கு இன்று இணையவழியில் அஞ்சலி


               

ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, பத்தி எழுத்துக்கள், இலக்கிய விமர்சனம் எனப் பன்முகப்பட்ட தளத்தில் தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் ஐயாத்துரை சண்முகலிங்கத்திற்கான (குப்பிழான் ஐ.சண்முகன்) இணையவழியிலான அஞ்சலி நிகழ்வு தமிழ்மொழிச் செயற்பாட்டகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30.04.2023) இரவு-07 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்களான மாவை நித்தியானந்தன், சின்னராஜா விமலன், அ.பெளநந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று அஞ்சலி உரைகள் ஆற்றவுள்ளனர்.