நாயன்மார்க்கட்டில் இன்று குருதிக் கொடை முகாம் நிகழ்வு

சர்வதேச சிறுவர் கழகங்களின் ஸ்தாபகர் Dr.ஹேர்மன் மைனர் ஞாபகார்த்த குருதிக் கொடை முகாம் நிகழ்வு யாழ்ப்பாணம் எஸ்ஓஎஸ் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.04.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை நல்லூர் நாயன்மார்க்கட்டில் அமைந்துள்ள எஸ்ஓஎஸ் சிறுவர் கிராம மண்டபத்தில் நடைபெறும்.

மேற்படி குருதிக் கொடை முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு குருதிக் கொடை முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.