ஏழாலையில் இன்று முத்தமிழ்மன்ற விருது விழா

ஏழாலை முத்தமிழ் மன்றமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் முத்தமிழ்மன்ற விருது விழா இன்று சனிக்கிழமை(22.04.2023) பிற்பகல்-03.30 மணி முதல் ஏழாலை முத்தமிழ்மன்றக் கலாச்சார மண்டபத்தில் ஏழாலை முத்தமிழ் மன்றத் தலைவர் நா.இலட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர் பண்டிதர் ஏ.அனுசாந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்வில் விருது வழங்கலும், பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.  

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.