மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் தேடுநருக்கான தொழிற்சந்தை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை(25.04.2023) காலை-09.30 மணி முதல் உடுவில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஆகவே, தொழில் தேடும் இளைஞர், யுவதிகளை நேர்முகத் தேர்வில் பங்குபற்றுமாறு மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினர் கேட்டுள்ளனர்.