நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை அதிக அளவில் பதிவாகியுள்ளதாகவும், நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், இரத்தினபுரி மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, பொதுமக்கள் வெப்ப சூழ்நிலையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.