அமரர்.மதியழகன் லக்ஸனின்(டானி) 31 ஆம் நாள் நினைவுதின மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் இடம்பெறவுள்ளது.
மனிதம் பேணும் மகத்தான இந்த இரத்தானப் பணியில் ஆண்கள், பெண்கள் இருபாலாரையும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0774901874, 0759037467 மற்றும் 0772208272 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.