இளவாலையில் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சைக்கிள், மரதன் ஓட்டப் போட்டிகள்

சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் 80 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆண்களுக்கான மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி நாளை சனிக்கிழமையும்(29.04.2023), ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(30.04.2023) நடைபெற ஏற்பாடாகியுள்ளன.            

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நாளை சனிக்கிழமை(29.04.2023) காலை-06 மணியளவில் இளவாலை சித்திரமேழிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும். இது சுமார் 55 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்டதுடன் வயது எல்லை அற்றது.

ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(30.04.2023) காலை-06 மணியளவில் இளவாலை சித்திரமேழிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும்.12 முதல் 15 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக இப் போட்டி நடைபெறவுள்ளது.  

பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை-06.30 மணியளவில் பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும். குறித்த போட்டி 7 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கியது.

ஆண், பெண் இருபாலாருக்குமான குறித்த மரதன் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வயது எல்லை அற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்குப் பெறுமதியான பணப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளதாகவும், போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மேலதிக விபரங்களுக்கு 0761051997, 0771186924 மற்றும் 0768564788 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)