மாவிட்டபுரம் கந்தன் காம்யோற்சவம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி  ஆலய  2023 ஆம் ஆண்டுக்கான சோபகிருது வருடக் காம்யோற்சவப் பெருவிழா எதிர்வரும்- 22.07.2023 சனிக்கிழமை ஆரம்பமாகி 15.08.2023 செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலையில் தீர்த்தத் திருவிழாவுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள் அறிவித்துள்ளார்.    

இவ் ஆலயத்தின் காம்யோற்சவம் சம்பந்தமான குழப்பங்கள் மற்றும் வதந்திகளைத் தவிர்க்கும் நோக்குடனேயே அவர் அடியவர்களுக்கு மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மேலும் விபரங்கள் அறிய ஆலய உத்தியோகபூர்வத் தொலைபேசி இலக்கங்களான 0212243334, 0771042257 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.