உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் அடுத்த வாரத்தின் பின்னரும் ஆசிரியர்கள் இணைந்து கொள்ளாத பட்சத்தில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கல்வியையும் அத்தியாவசிய சேவையாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டின் மாணவர்களைப் பணயக் கைதிகளாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
கல்வி அமைச்சின் முன்னேற்றம் தொடர்பாக இன்று புதன்கிழமை(19.04.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.