கொய்யாத் தோட்டத்தில் நாளை இரத்ததான முகாம்

கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றம் ஆரம்பமாகி மூன்றாவது வருட நிறைவை முன்னிட்டு நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (22.04.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை கொய்யாத் தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்பும் குருதிக் கொடையாளர்கள் 0773303811 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.