கோண்டாவிலில் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்

கோண்டாவில் கிழக்கு நாராயணா சனசமூக நிலையம்,கிராம அபிவிருத்திச் சங்கம், மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகம், மாதர் சங்கம், பாலர் பாடசாலை என்பன இணைந்து நடாத்தும் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், இல்ல மெய்வல்லுனர் போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் சித்திரைப் புத்தாண்டு தினமான கடந்த-14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இதன்படி,நாளை புதன்கிழமை(19.04.2023) மாலை-04 மணியளவில் மேற்படி சனசமூக நிலைய முன்றலில் ஸ்ரீ நாராயணா சனசமூக நிலையத் தலைவர் ந.சிவாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், களுத்துறை மாவட்டத் தமிழ்ப் போதனாசிரியர் சன்னஸ்கம இந்தரதன தேரர், முல்லைத்தீவு கூட்டுறவு  அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்வில் மாணவர்கள் கெளரவிப்பும் அதனைத் தொடர்ந்து மேற்படி சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் நெறியாள்கையில் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.