கோண்டாவிலில் நாளை திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தில் சைவசமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(14.05.2023) இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் காலை-08.30 மணி முதல் ஆலயத்தில் திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருமுறை பண்ணுடன் ஓதப்படும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் விநாயகப் பெருமானுக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து மதியம்-12.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.