இணுவில் பரராஜசேகரனுக்கு நாளை கொடியேற்றம்

யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்கும்  பிரசித்திபெற்ற இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(14.05.2023) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 11 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும். 

எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கைலாசவாகனத் திருவிழாவும், 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முத்துச் சப்பரத் திருவிழாவும், 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-07 மணியளவில் திருமஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தங்கச் சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 24 ஆம் புதன்கிழமை மாலை-04 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-11 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ.அரவிந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார். 

(செ.ரவிசாந்)