களனிப் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை(18.05.2023) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 மாணவ செயற்பாட்டாளர்கள் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த ஆறு பேரும் மகர நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்கள் தலா ஐந்து லட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மாதத்திற்கு ஒரு முறை கிரிபத்கொடைப் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்னாயக்க மற்றும் தில்ஷான் ஹர்ஷன ஆகியோர் கைது செய்யப்பட்டு 138 நாட்கள் கடந்துள்ளமையைச் சுட்டிக்காட்டி பல்கலைக்கழக மாணவர்களால் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.