கொக்குவிலில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(21.05.2023) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள தனியார் இல்லத்தில் நடைபெறவுள்ளது.    

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குருதிக் கொடை வழங்க விரும்புபவர்கள் 0777787542 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரத்ததானம் வழங்கும் அனைத்துக் குருதிக் கொடையாளர்களுக்கும் பெறுமதியான ஊக்குவிப்புப் பரிசில் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.