சாதாரண தரப் பரீட்சை திங்களன்று ஆரம்பம்

 

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29.05.2023) ஆரம்பமாகவுள்ளது. 

ஜூன் மாதம்-08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் மொத்தமாக 4,72,553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 3,94,450 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர். 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான  வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை(26.05.2023) நள்ளிரவு முதல் ஆரம்பமாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க து. .