மாதகலில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(29.05.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழக உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களும், ஆர்வலர்களும்  கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர்களைக் காக்க ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.