இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையாருக்கு நாளை கொடியேற்றம்

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(30.05.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 16 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.

இவ் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் அடுத்தமாதம்-12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும் மறுநாள் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை-09.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய திருப்பணிச் சபையினர் தெரிவித்துள்ளனர்.