சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(04.05.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0772487741 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.