தெல்லிப்பழை வீணாக்கடவை காசிவிநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்


தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.


இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08 மணியளவில் சங்காபிஷேக உற்சவமும், பகல் வேட்டைத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணியளவில்  சப்பரத் திருவிழாவும், 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-10 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.