மருதனார்மடத்திலிருந்து தாவடி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்குப் பறவைக் காவடிகள்

                             

யாழ்.தாவடி ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தோற்சவம் சித்திராப் பூரணை தினமான நேற்று வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை சிறப்பாக இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு யாழ்.மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்திலிருந்து அப்பகுதியைச் சேர்ந்த மூன்று அடியவர்கள் தாவடி வடபத்திரகாளி அம்மன் ஆலயம் நோக்கிப் பறவைக் காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். 


(செ.ரவிசாந்)