இளவாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03.30 மணி வரை இளவாலையில் அமைந்துள்ள சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

இரத்ததான முகாம் நிகழ்வின் ஒரு கட்டமாக நாளை முற்பகல்-11 மணியளவில் தெரிவுசெய்யப்பட்ட  குருதிக் கொடையாளர்களுக்கான கெளரவிப்புக்களும் இடம்பெறும்.        

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு 0761051997, 0771186924 மற்றும் 0768564788 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.