நாளை கிராம வலம் வருகிறாள் குப்பிழான் கன்னிமார் கெளரித் தாய்

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் நாளை திங்கட்கிழமை(08.05.2023) காலை-08 மணியளவில் மேற்படி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும்

இவ் ஆலயக்  கிராம ஊர்வலம் தொடர்பாக இன்று மாலை கிராமம் முழுவதும் அறிவிப்புப் பணி இடம்பெற்றது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த-2020, 2021 ஆம் ஆண்டுகளில் இவ் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டான கிராம ஊர்வலம் நடைபெறாத நிலையில் கடந்த வருடம் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.