ஏழாலை துர்க்காதேவி வருடாந்த அலங்கார உற்சவம் நாளை ஆரம்பம்

தேவி கோயில் என அழைக்கப்படும் ஏழாலை துர்க்காதேவி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை திங்கட்கிழமை(15.05.2023) மாலை-06.30 மணியளவில் விசேட அபிஷேகம், பூசைகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறும். ஒன்பது தினங்களும் தினமும் மாலை-06.30 மணியளவில் அபிஷேகம், பூசைகள் இடம்பெற்று இரவு-08 மணியளவில் வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றுத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறவுள்ளது.

பத்தாம் நாளான எதிர்வரும்-24 ஆம் திகதி புதன்கிழமை காலை-09 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்றுத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும்(அன்னதானம்) நடைபெறும். அன்றையதினம் இரவு-07 மணியளவில் விசேட பூசை, திருவூஞ்சலைத் தொடர்ந்து அம்பாள் பூந்தண்டிகையில் திருவீதி உலா எழுந்தருளும் திருக்காட்சியும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.


 (செ.ரவிசாந்)