இன்று செவ்வாய்க்கிழமை(20.06.2023) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மா விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்ப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.