கிராம ஊர்வலம் வருகிறான் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகன்

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு   நாளை செவ்வாய்க்கிழமை(20.06.2023) கிராம ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

நாளை மாலை-04 மணியளவில் மேற்படி ஆலயத்திலிருந்து கிராம ஊர்வலம் ஆரம்பமாகுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிராம ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மாலை கிராமம் முழுவதும் அறிவிப்புப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.