வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சேவை: முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர்களுக்கு கெளரவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தென்மராட்சி வரணி சிட்டிவேரம்  கண்ணகி அம்மன் ஆலய தேர் ,தீர்த்த உற்சவத்தில் சேவையாற்றிய இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையைச் சேர்ந்த தொண்டர்களின் சேவையைப் பாராட்டி மேற்படி ஆலய நிர்வாகத்தினரால்   சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(18.06.2023) பிற்பகல்-02.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபைத் தொண்டர்களின் சேவைக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.