கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் 50 வருட நிறைவை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(15.06.2023) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நடைபெறும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.