குப்பிழான் வீரபத்திரர் அலங்கார உற்சவம் வெள்ளியன்று ஆரம்பம்

யாழ். குப்பிழான் வீரபத்திரர் கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(16.06.2023) மாலை-03 மணியளவில் விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறவுள்ளது. ஆனி உத்தர நன்னாளான எதிர்வரும்- 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணியளவில் விசேடமாக 108 சங்காபிஷேகம் இடம்பெறும்.

இதேவேளை, அலங்கார உற்சவ நாட்களில் தினமும் மாலை-03 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து பூசை வழிபாடுகளும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)