அமரர்.தேவராசா நிரோஜ் ஞாபகார்த்தமாக விதையனைத்தும் விருட்சமே குழுமம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(23.06.2023) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை யாழ்.தாவடி ஸ்ரீ காமாட்சி அம்பாள் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்களைக் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.
இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0773241755, 0771945344 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் கேட்டுள்ளனர்.