யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை திருவாசக முற்றோதல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை, இசைத்துறை, உயர் பட்டப் படிப்புக்கள் பீடம், சைவசித்தாந்த முதுமாணிக் கற்கை அணி- Vll இணைந்து நடாத்தும் திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(23.06.2023) காலை-08 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர். செ.கண்ணதாசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன், மேற்படி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். நா.சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி மா.வேதநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.