உரும்பிராயில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வு

உரும்பிராய் பரிசுத்த இம்மானுவேல் ஆலயம் உருவாகி 68  ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(24.06.2023) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை மேற்படி ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

இதேவேளை, இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0718675580,0779871357 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.