பண்டத்தரிப்பில் நாளை கண்புரையைக் கண்டறியும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்புரை நோயுள்ளவர்களைத் தெரிவு செய்து    சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்வில்லை பொருத்தப்படவுள்ளமையால் நோயாளரைத் தெரிவு செய்வதற்கான கண்புரையைக் கண்டறியும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நாளை  சனிக்கிழமை(24.06.2023) பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

நாளை காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் இடம்பெறுமென சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.