சண்டிலிப்பாயில் கண்புரையைக் கண்டறியும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்புரை நோயுள்ளவர்களைத் தெரிவு செய்து    சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்வில்லை பொருத்தப்படவுள்ளமையால் நோயாளரைத் தெரிவு செய்வதற்கான கண்புரையைக் கண்டறியும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை(01.07.2023) சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெறவுள்ளது.

அன்றையதினம் காலை-09 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் இடம்பெறுமென சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.