மானிப்பாய் மருதடி விநாயகர் தர்மகர்த்தா சபைக்கு ஏழு உறுப்பினர்கள் தெரிவு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தர்மகர்த்தா சபைக்கு 14 வேட்பாளர்களில் 7 பேரினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அண்மையில் காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ்.மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் இடம்பெற்றது.குறித்த தேர்தலில் வழிபடுவோர் சங்க அங்கத்தவர்கள் 1062 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குச் சீட்டுக் கணக்கெடுப்பு முடிவில் நிரூபன் புவனேந்திரன், பிரதீபன் துரைரட்ணம், பிரதீபன் திவ்விய மனோகரன், வரதராசா கந்தையா, அருந்தவநாதன் குமாரசிங்கம், சிதம்பரநாதன் நடராசா, தர்பாகரன் தம்பிராசா ஆகிய ஏழு பேர் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.